﻿நண்பர்களே, 

வணக்கம். ஏற்கனவே வெளியாகியிருக்கும் வள்ளுவன் பார்வை, எழில், மின்தமிழ் விசைப்பலகைகளுக்கடுத்து, "அந்தகக்கவி" என்கிற புதிய விசைப்பலகை வெளியிடப்பட்டுள்ளது. மின்தமிழ் என்கிறப் பெயரை மாற்ற வேண்டுமென சிலர் கோரியதால் இந்தப் புதிய விசைப்பலகை. 

இதன் சிறப்பம்சங்கள்:  

ஆங்கில   விசைப்பலகையில் உள்ள அனைத்து நிருத்தற் குரிகளும் இதில்   கொண்டுவரப்பட்டுள்ளது.

குரில்-ஒ, ழ, ஞ, ய, ம, ன, ட,  போன்ற எழுத்துகள் இடமாற்றம் செய்யப்பட்டு விரல்களுக்கு வசதியான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

ங, ண, ம, ழ, ன, ?, போன்ற   எழுத்துகள் தட்டச்சு செய்வதற்கு வசதியாக ஷிஃப்ட்டில்லாமல் தட்டும்படி   வைக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக ஞ்ச, ந்த, ஃப, ம்ப, ண்ட, ன்ற. ட்ச போன்ற கூட்டெழுத்துகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனை நிருவும் முரை:

சுருக்கப்பட்ட கோப்பினை விரிவாக்கவும்.அதில் அந்தகக்கவி என்கிற கோப்புறையை வெளியே படியெடுத்து வைத்துக் கொள்ளவும். படிக் கோப்புறையில் இருக்கும் செட்டப் ஃபயிலின் மீது உள்ளிடு விசையை அழுத்தவும். சுமார் பத்து விநாடிகள் காத்திருக்கவும். விசைப் பலகை நிறுவப்பட்டு “க்ளோஸ்” பொத்தான் தோன்றும். ஸ்பேஸ் பாரினை தட்டி மூடிவிடவும். 

கண்ட்ரோல் பேனலில் Region and Language அமைப்புகளில் காணப்படும் Keyboard and Languages பக்கத்தில் "அந்தகக்கவி" விசைப் பலகை தெரிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்துக் கொள்ளவும்.  இனி உங்கள் கணினியில் இடது ஆல்ட்டையும் இடது ஷிப்டையும் ஒன்றாக அழுத்தினால் அந்தகக்கவி என்ற திருத்தப்பட்ட தமிழ் விசைப்பலகை வரும். ஏதேனும் காரணங்களுக்காக அந்தகக்கவி விசைப் பலகையை நீக்க விரும்பினால், கண்ட்ரோல் பேனலில் உள்ள புரோக்ராம்ஸ் அண்ட் ஃபீச்சர்ஸிற்கு சென்று நீக்கிவிடலாம். 

நண்பர்கள் வசதிக்காக முளு விசைப்பலகை எழுத்துகளின் 
பட்டியல்: 

உயிரெழுத்துகள்:  

ஒற்று = d
குரில்-அ = shift D
நெடில்-ஆ = shift E
குரில்-இ = shift F
நெடில்-ஈ = shift R
குரில்-உ = shift G
நெடில்-ஊ = shift T
குரில்-எ = shift Z
நெடில்-ஏ = shift S
நெடில்-ஐ = shift W
குரில்-ஒ = shift X
நெடில்-ஓ = shift A
நெடில்-ஔ  = shift Q
ஆய்த எழுத்து ஃ = shift I

உயிர்மெய் எழுத்துகள்:   

க = k
ங = u
ச = ; (அரைப் புள்ளி)
ஞ = Shift o
ட = y
த = l
ந = v
ன = B.
ண = c
ப = h
ம = m
ய = i
ர = j
ற = shift J.
ல = n
ள = shift N
ழ = P.
வ = O

வடமொழி எழுத்துகள்

ஜ = shift L
க்ஷ = shift 2 
ஸ = shift : (முக்கால் புள்ளி)
ஷ = shift M
ஸ்ரீ = shift 4 
ஹ = shift K

கூட்டெழுத்துகள்

ஃப = shift 6
ஞ்ச = shift P
ந்த = shift V
ன்ற = Shift B
ண்ட = Shift C
ம்ப = Shift H
ங்க = Shift U
ட்ச = Shift Y

சிறப்புக் குரிகளைப் பொருத்தமட்டில்  எண் வரிசையில் ஒன்று முதல்  சுழியம் வறை (2, 4 6 தவிர), ஆங்கில விசைப்பலகையிலுள்ள வியப்புக் குறி முதல் வல பிறை  வரையிலான சிறப்புக் குறிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

மாற்றங்களைப்பெரும் நிருத்தற் மற்றும் சிறப்புக் குரிகள்:   

செமிக்கோலன் மற்றும்   கோலன் ஆகியவை உள்ளிடு விசைக்கு இடப்புரத்தில் L-க்கு வலப்புரத்திலும் உள்ள பொத்தானில் முரையே ஷிஃப்டில்லாமலும் ஷிஃப்டுடனும் தட்டவேண்டும்.

Shift   , (கால் புள்ளியில்) ' ஒற்றை மேர்க்கோள்   உள்ளது.
Shift . (முற்றுப் புள்ளியில்) " இரட்டை மேர்க்கோள்   உள்ளது.

shift இல்லாமல் கேள்விக்குரியும்,   shift உடன் சாய்வுக் குறியும் முற்றுப்புள்ளிக்கும் வலது பக்கமாக உள்ள பொத்தானில் வைக்கப்பட்டுள்ளது.

எண் ஒன்றிற்கு இடப்புறமாக உள்ள பொத்தானில் < (குறைவு), > (மிகுதி) ஆகிய விசைகள் ஷிஃப்டுடனும், ஷிஃப் இல்லாமலும் தட்டச்சிடும்படி வைக்கப்பட்டுள்ளன. 

@ (at), $ (dollar) மற்றும் ^ (caret) குறிகள் நீக்கப்பட்டுள்ளன. 

மற்ற பொத்தான்களில் ஆங்கில விசைப்பலகையிலுள்ள சிறப்புக் குறிகள் அப்படியே கொண்டு வரப்பட்டுள்ளன.

இவண்,

தி.தே. தினகர்
சென்னை
